Categories
உலக செய்திகள்

நீல நிற உடையுடன்…. கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் பணிசெய்ய களத்தில் இறங்கிய இளவரசி!

ஸ்வீடன் இளவரசி சோபியா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கிவிட்டார். உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டிவிட்டது. இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த வைரசால் ஸ்வீடன் நாட்டில் 12,500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,300 க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் 35 வயதான ஸ்வீடன் நாட்டு இளவரசி சோபியா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கிவிட்டார். இவர் ஆன்லைனில் இதற்காக 3 […]

Categories
உலக செய்திகள்

‘கிரேட்டா நம் காலத்துக்கான தலைவர்’ – புகழ்ந்து தள்ளிய லியனார்டோ டிகாப்ரியோ

கிரேட்டா தன்பர்க் நமது காலத்துக்கான தலைவர் என்றும்; அவரது பேச்சு பருவ நிலை மாற்றம் குறித்து நாம் உணர இறுதி அழைப்பு என்றும் பிரபல ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பருவ நிலை செயல்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க்கை சமீபத்தில் சந்தித்து உரையாடியுள்ளார். கிரேட்டா தன்பெர்க்குடன் எடுத்த புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், “மனித வரலாற்றில் முக்கியத் தருணங்களில் மாற்றத்துக்குத் தேவையான குரல்கள் […]

Categories
உலக செய்திகள்

சிலை போல் நிற்கும் நாய்கள்…. வால் கூட ஆடவில்லை… வைரல் வீடியோ..!!

ஸ்வீடன் நாட்டில் 3 நாய்கள் உரிமையாளரின் கட்டளையின் படி  சிலைபோன்று அசையாமல் நின்ற  வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஸ்வீடன் நாட்டில் சண்ட்ஸ்வல் என்ற இடத்தைதில் வசித்து வரும் எவ்லின், ஆஸ்திரேலியன் கெல்பிஸ் வகையைச் சேர்ந்த 3 நாய்களை வளர்த்து வருகிறார். அந்த நாய்களுக்கு ஜாக்ஸன், (Jackson) கேஷ் (Cash) மற்றும் எக்ஸ் (X ) என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார். இந்த 3 நாய்களும் அவர் சொல்வதை சரியாக செய்யும். அதன்படி  அந்த நாய்கள் வேட்டைக்குப் புறப்படும் முன்பு  […]

Categories
உலக செய்திகள்

பூமியை காப்பாற்ற போராட்டம் நடத்திய 16 வயது சிறுமி…. நோபல் பரிசு வழங்க கோரிக்கை..!!

ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டாவுக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  இவ்வுலகில் ஒரு சிலர் மட்டுமே நாட்டின் மீதும்,  சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டு போராட்டங்களை நடத்துவர். அப்படி இருக்கும் சூழலில் ஸ்வீடனைச் சேர்ந்த கிரேட்டா தன்பர்க் (Greta Thunberg) என்ற 16 வயது சிறுமி தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, பூமி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச் சூழல் மாசடைவது குறித்து ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்து […]

Categories

Tech |