திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற பௌர்ணமி கிரிவல ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். குறிப்பாக பௌர்ணமி நாளன்று கிரிவலம் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். அந்த வகையில், இந்த மாத பௌர்ணமிக்காக தமிழகமெங்குமிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 14 கிலோமீட்டர் நகர் பகுதியின் மையத்தில் உள்ள மலையைச் சுற்றி கிரிவலம் மேற்கொண்டனர். விடியவிடிய நடைபெற்ற […]
