பழிக்குப்பழியாக இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஆனையூர் எஸ்விபி நகரைச் சேர்ந்தவர் உதயகுமார் (28). இவர் மீது ஏற்கனவே மூன்று கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் புதூர் ஆலங்குளம் தனியார் எண்ணெய் மில் அருகில் உதயகுமார் சென்றபோது முன்விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத நபர்கள் ஓட ஓட அவரை விரட்டி வெட்டிக்கொலை செய்தனர். இதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உதயகுமார் உயிரிழந்தார். அவரைக் […]
