எஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால் அவர் எம்எல்ஏவாக இருந்தபோது வாங்கிய சம்பளத்தைத் திருப்பியளிக்க தயாரா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார். கடலோரங்களில் மீன் வளத்தைப் பெருக்க செயற்கையாக அமைக்கப்பட்ட பவளப்பாறைகளை கடலில் நிறுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று தொடங்கிவைத்தார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “ஆழ்கடலில் மீன் வரத்து அதிகம் உள்ளதால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பவளப்பாறைகள் நிறுவும் திட்டத்தைத் தொடங்க உள்ளோம். மீனவர்களுடன் […]
