பிளஸ் 1 படிக்கும் மாணவி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]
