சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் உருவாகிவரும் ‘அருவா’ படத்தில் இளம் கதாநாயகியான பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தற்போது ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. இதையடுத்து அவர் 6-ஆவது முறையாக ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘அருவா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரசால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநர் ஹரி தற்போது இப்படத்தில் யாரையெல்லாம் […]
