அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தின்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் 71ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதேபோல, அமெரிக்க வாழ் இந்தியர்களால் வாஷிங்டனில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தில் ஏராளமான அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்துகொண்டனர். அப்போது திடீரென்று சில காலிஸ்தான் போராளிகள், இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், அவர்கள் இந்தியாவின் மூவர்ணக் கொடியையும் அரசியலமைப்பையும் எரிக்க முயன்றதால் […]
