தேர்தலை முன்னிட்டு எல்லைப் பகுதிகளில் 15 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 3 பேரூராட்சிகள் மற்றும் 4 நகராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் தங்களது பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்பின் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அமர்குஷ்வாஹா மற்றும் […]
