பாஜகவுக்கும் தனக்கும் என்ன உறவு இருக்கிறது என்பதை ரஜினிகாந்த் கூறியுள்ளார் என தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜகவின் மாநில, மாவட்ட மற்றும் உட்கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரும், தேசிய பொதுச்செயலாளருமான முரளிதர ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன், தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி […]
