என்னைத் தேடி நீங்கள் வரவேண்டாம், உங்களை தேடி நான் வருகிறேன் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு பலகை வைத்து புகார் மனு வாங்கும் செயல் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக செல்வநாகரத்தினம் கடந்த 7ஆம் தேதியன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் வாரநாட்களில் புகார் அளிக்க வரும் பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள அவரது அறையில் சந்தித்து வருகிறார். இந்நிலையில், அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வரும் முதியவர்கள், […]
