‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகர் ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் முக்கிய கதாநாயகர்களில் ஒருவரான ஜெய், ‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற புதிய படத்தில் தற்போது நடித்துவருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பானுஸ்ரீ நடிக்கிறார். ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கும் இப்படத்தை திருக்கடல் உதயம் தயாரிக்கிறார்.சமூகத்தின் நலனுக்காக சாதாரண மனிதன் ‘சூப்பர் ஹீரோ’வாக மாறுகிறார். இப்படத்தில் வில்லன்களாக ராகுல் தேவ், தேவ் கில், ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் ஜெ. பிரகாஷ், […]
