நடைபெறவுள்ள டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளுடன் கூட்டணியை அறிவித்துள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இத்தேர்தலில், 70 தொகுதிகளிலும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளது. அதேபோல காங்கிரஸ் கட்சியும் ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து போட்டியிடவுள்ளன. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக டெல்லி மாநிலத் தலைவர் மனோஜ் திவாரி, டெல்லி […]
