திருச்செந்தூர் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க சில நாட்களே உள்ள நிலையில் வருடந்தோறும் தனியார் பள்ளி வாகனங்களை அப்பகுதி போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சான்றிதழ் வழங்கி வருவது வழக்கம் இந்நிலையில் திருச்செந்தூர் பகுதி வட்டார போக்குவரத்து துறைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் மீது […]
