ஜம்மு-காஷ்மீரில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையடுத்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா (Bandipora) மாவட்டத்தின் அருகே உள்ள சும்பல் (Sumbal) பகுதியில் 3 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, ஸ்ரீநகரைச் சேர்ந்த இரு கல்லூரிகளின் மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்கு வெளியே வந்து போராட்டம் நடத்த முயன்றதால் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. […]
