ஓமன் நாட்டை நீண்டகாலம் ஆட்சிசெய்து வந்த சுல்தான் கபூஸ் பின் சையத் அல் சையத் உடல்நலக்கோளாறு காரணமாக இன்று காலமானார். இதுதொடர்பாக ஓமன் அரசு ஊடகம் வெளியிட்டிருந்த ட்வீட்டர் பதிவில், “சில மாதங்களாக உடல் நலக்கோளாறில் அவதிப்பட்டுவந்த சுல்தான் கபூஸ் பின் சையத் அல் சையத் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 79. 1970ஆம் ஆண்டு ஓமன் நாட்டின் சுல்தானாக முடிசூடிய அவர், அந்நாட்டை நவீனமயமாக்குவதில் பெரும் பங்காற்றினார். அதேசமயம், பரம […]
