மணப்பாறை அருகேயுள்ள சுஜித் இல்லத்திற்குச் சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சுஜித்தின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர். திருச்சி மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நாடே அஞ்சலி செலுத்தி வருகிறது. இந்நிலையில், சுஜித் இல்லத்திற்குச் சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அங்கிருந்த சுஜித் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுஜித்தின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “குழந்தையை […]
