கடன் தொல்லையால் பெண் உடலில் தீ வைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகேயுள்ள அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன். தச்சு வேலை செய்து வரும் இவருக்கு தனலட்சுமி (35) என்ற மனைவி உள்ளார்.. இவர்களுக்கு அபிநயா(12) மற்றும் மாதேஷ் (8) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.. இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் சொந்தமாக வீடு கட்டினர். இதற்காக தனியார் வங்கியிடமும், சிலரிடமும் […]
