கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மீனவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள புதுநகர் பகுதியில் சுந்தரமூர்த்தி என்ற மீனவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது, மனமுடைந்த சுந்தரமூர்த்தி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]
