பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் சுலைமான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரிமளா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பரிமளா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பரிமளா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை […]
