Categories
சினிமா தமிழ் சினிமா

வேறு ஒருவருடன் தொடர்பு… நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை!

பிரபல தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் துணை நடிகையாக நடித்துவரும் ரேகாவின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர், நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (39). இவர் அண்ணாநகர், டி.வி.எஸ். காலனியிலுள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் கடந்த ஆறு மாதங்களாக மேலாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் விடுமுறை முடிந்து இன்று காலை அலுவலகத்தை திறக்க ஊழியர்கள் வந்தனர். அலுவலகத்தை திறந்து உள்ளே சென்ற ஊழியர்கள் அங்கிருந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி: குழந்தை உயிரிழப்பு!

பெரம்பலூர்: குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த தாய் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பெரம்பலூர் அருகேயுள்ள அய்யலூர் குடிக்காட்டைச் சேர்ந்தவர் சரவணன் (35) – அன்பரசி (31) தம்பதி. இருவரும் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். பெரம்பலூர் வடக்குமாதவி சாலை எம்ஆர் நகரில் வசித்து வரும் இவர்களுக்கு ஹன்சிகா (4), மேகாஸ்ரீ (எ) கோமதி (ஒரு வயது) என இரண்டு குழந்தைகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் தற்கொலை..!!

பிரபல இசைக்குழுவான லஷ்மன் ஸ்ருதி நிறுவனத்தின் உரிமையாளர் ராமன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இசைக் கச்சேரி குழு மற்றும் இசைக் கருவிகள் விற்பனை செய்யும் நிலையமான லஷ்மன் ஸ்ருதியின் நிறுவனர்கள் முருகவேல், ராமன் மற்றும் லட்சுமணன். இதில் இரண்டாவது சகோதரரான ராமன், சென்னை கோடம்பாக்கத்தில் மனைவி நிர்மலா, மகன் மனோஜ் ஆகியோருடன் வசித்து வந்தார். பைல்ஸ், நெஞ்சு வலி ஆகிய உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த ராமனுக்கு கடந்த ஒரு வார காலமாக பைல்ஸ் தொல்லை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை..!!

சாமிதோப்பு அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகிலுள்ள காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி விஜயகுமார் (53). இவருக்கு ஜெயபதி (48) என்ற மனைவியும் ஐந்து மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். விஜயகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதனை, அவரது மனைவி ஜெயபதி அடிக்கடி கண்டிக்க, கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்றும் விஜயகுமார் குடித்துவிட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசுப் பள்ளி ஆசிரியை தற்கொலையில் திடீர் திருப்பம்….பேராசிரியர் கைது…!!

அரசுப் பள்ளி ஆசிரியை  கல்லூரி வகுப்பறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சபவத்தில் ஒரு புதிய திருப்பம். சென்னை பெரம்பூரில் இருக்கும்  மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் ஹரி சாந்தி. நேற்று மதியம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரிக்கு போன இவர் கல்லூரியின் முதல் தளத்தில் இருக்கும் தெலுங்கு வகுப்பறைக்கு சென்றுள்ளார். காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த ஊழியர்கள் வகுப்பறைக்குள் ஹரி சாந்தி மின் விசிறியில்  தூக்குபோட்டு தற்கொலை செய்த […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் முன் பாய்ந்த நபர் …உடல் நசுங்கி சாவு …!!

ரயிலின் முன்பு ஒருவர் பாய்ந்து  தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மும்பையில் ,குர்லா ரயில் நிலையத்தில்மக்கள் அனைவரும் ரயிலுக்காக காத்திருந்தனர் .அப்போது ஒருவர் ரயில் அருகில்  நெருங்கி வந்ததும், திடீரென நடைமேடையில் இருந்து குதித்து ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்துள்ளார்.இதைதொடர்ந்து ரயில் ஏறியதில் அவர்சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார் . இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் பயத்தில் பதறி அடித்தபடி அங்கிருந்து ஓடினர். இத்தகவலை அறிந்த ரயில்வே போலீசார் விரைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்லூரி வகுப்பறைக்குள் தற்கொலை செய்த ஆசிரியை …!!

அரசுப் பள்ளி ஆசிரியை  கல்லூரி வகுப்பறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட  சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர் . சென்னை பெரம்பூரில் இருக்கும்  மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர்  ஹரி சாந்தி. நேற்று மதியம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரிக்கு போன இவர் கல்லூரியின் முதல் தளத்தில் இருக்கும்  தெலுங்கு வகுப்பறைக்கு சென்றுள்ளார்.காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த ஊழியர்கள் வகுப்பறைக்குள் ஹரி சாந்தி மின் விசிறியில்  தூக்குபோட்டு தற்கொலை […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

மெட்ரோவில் பாய்ந்த கணவன்… குழந்தையை கொன்ற மனைவி… டெல்லியில் சோகம்..!!

டெல்லியில்  தமிழகத்தை சேர்ந்த நபர் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் குழந்தையை கொன்ற அவரது மனைவி தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் . சென்னையை அடுத்து நொலம்பூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார் .குழந்தை ,மனைவி மற்றும் தம்பியுடன் நொய்டாவில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து  வந்த அவர் டெல்லி ஜவகர்லால் நேரு  மெட்ரோ ரயில் நிலையத்தில் ஓடும் […]

Categories
மாநில செய்திகள்

திருப்பதியில் லாரியில் விழுந்து பக்தர் தற்கொலை …போலீஸ் விசாரணை …!!

கோயிலுக்கு பால் ஏற்றி வந்த லாரியின் பின்பக்க சக்கரத்தில் விழுந்து பக்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.   திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அபிஷேகம் செய்வதற்காக பால் ஏற்றி வந்த லாரியின் பின்பக்க சக்கரத்தின் முன்பு 45 வயது மதிக்கத்தக்க நபர்  ஒருவர் திடீரென படுத்தார் . அடுத்த சில நொடிகளில் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்நிலையில் இறந்தவர் யார்? எதற்காக இந்த முடிவை மேற்கொண்டார்? என்று […]

Categories
தேசிய செய்திகள்

”கர்ப்பமாக்கி கைவிட்ட காதலன்” தீ வைத்துக்கொண்ட சிறுமி ….!!

கர்ப்பமாக்கிய காதலன் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால், மன உளைச்சலுக்குள்ளான சிறுமி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம் பேத்தியாவைச் சேர்ந்த 19 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் காதலித்துள்ளார். சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய அந்த இளைஞர் பலமுறை அவருடன் உறவில் இருந்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பமாகவே, அதை அந்த இளைஞரிடம் கூறி தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால், திருமணம் செய்துகொள்ள அந்த இளைஞர் மறுத்துவிட்டார். இந்நிலையில், தன்னுடைய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை… பள்ளியின் தலைமை ஆசிரியைக் கைது!

11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியையைக் காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி கருணாகரன். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு மரிய ஐஸ்வர்யா (16) என்ற மகளும், தாம்ஆண்ட்ரூஸ் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் மரிய ஐஸ்வர்யா அரசு உதவி பெறும் வி.வி.டி நினைவு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி ஐஸ்வர்யா, மாடியில் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

”எஸ்.ஐ தூக்கிட்டுத் தற்கொலை” புதுவையில் பரபரப்பு …!!

நெட்டுப்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர், காவல் குடியிருப்புக் கட்டடத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். புதுச்சேரி நெட்டுப்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக விமல்குமார் பணியாற்றி வந்தார். வில்லியனூரில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்த இவர், இன்று மதியம் காவல் நிலையத்திற்கு அருகே உள்ள காவலர் குடியிருப்புக் கட்டடம் அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விமல்குமார் குடும்பப் பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா […]

Categories
தேசிய செய்திகள்

வேலை போய்டும்….. ”மனஅழுத்தத்தால் தற்கொலை” ஐடி ஊழியருக்கு வந்த துயரம் …!!

ஐடி வேலை பார்க்கும் பெண் ஒருவர், தனது ஒப்பந்தம் முடியவுள்ளது என்ற மனஅழுத்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ராய்துர்காம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி வேலை செய்து வந்தவர் ஹரினி(24). இவர் இரண்டு வருட ஒப்பந்தத்தில் ஐடி வேலை செய்து வந்தார். சில நாட்களுக்குள் இவரது ஒப்பந்தம் முடியவுள்ளதாக நிறுவனம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒப்பந்தம் கிடைக்கவில்லை என்றால் வேலை போய்விடும் என்பதால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐ.சி.எப் தொழிற்சாலை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை..!!

ஐ.சி.எப் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி (55). இவர் ஐ.சி.எப் இரயில் பெட்டித் தொழிற்சாலையில் சீனியர் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். உடல்நிலை சரியில்லாததால் நீண்ட நாட்களாக விடுமுறையில் இருந்த இவர், நேற்று முன்தினம் (நவ.17) பணிக்கு திரும்பினார். இந்நிலையில், தொழிற்சாலையின் அறையில் ராஜாமணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப் பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மது போதையில் தற்கொலை செய்துகொண்ட தலையாரி!

குடும்ப பிரச்னை காரணமாக மது போதையில் கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் வெங்கடாச்சலம், இவர் துறைமங்கலம் கிராம உதவியாளராக (தலையாரி) பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தொடர்ச்சியாக மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது, அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனிடையே நேற்று வழக்கம்போல் மது அருந்துவிட்டு மனைவியிடம் சண்டையிட்டபோது ஏற்பட்ட பிரச்னையால், தனது வீட்டு விட்டத்தில் வேட்டியால் […]

Categories
மாநில செய்திகள்

”18 வயது IIT மாணவி தற்கொலை” காரணம் என்ன ? பரபரப்பு தகவல் …!!

கேரளாவைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பாத்திமா லத்திப் (18) என்ற கேரளாவைச் சேர்ந்த 18 வயது மாணவி, சென்னை ஐஐடி கல்லூரியில் முதுகலை (எம்.ஏ.) மனிதநேயம் முதலாம் ஆண்டு படித்துவந்தார். இவர் ஐஐடி கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்துவந்தார்.இவர் தினமும் கேரளாவில் உள்ள தனது பெற்றோரிடம் செல்ஃபோன் பேசுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு தனது பெற்றோரிடம் பேசாமல் இருந்ததாகக் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

”எங்களை விடுவியுங்கள்” 20 பேர் தற்கொலை முயற்சி… திருச்சி சிறையில் பரபரப்பு …!!

விடுதலை செய்ய கோரி 20 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது திருச்சி மத்திய சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் கூடிய அகதிகளுக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள , குறிப்பாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயன்றவர்கள் , போலி பாஸ்போர்ட்டுகள் பயன்படுத்தியவர்கள் ,  அனுமதி இல்லாமல் இந்தியாவில் வாழ்தந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இலங்கை , வங்கதேசம் , சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். 70_க்கும் மேற்பட்டோர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி வெறும் 41 நாள்…. பெண் தற்கொலை …. கணவனிடம் விசாரணை …!!

திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதால், அவரின் கணவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகேயுள்ள மேல்மதலம்பேடு மேல் காலனிப் பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமிக்கும், ரெட்டேரி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. நாகராஜ், தனது மனைவி வீட்டிலேயே தங்கி பெயிண்டர் வேலை செய்துவந்துள்ளார். நாகராஜ் வழக்கம் போல் இன்று வேலைக்குச் சென்றுள்ளார். கணவர் வேலைக்குச் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ரூ 13,000,00,00,000.. ”தற்கொலை செய்துகொள்வேன்” மிரட்டும் மோசடி மன்னன் …!!

தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தினால் தற்கொலை செய்துகொள்வேன் என நிரவ் மோடி மிரட்டல் விடுத்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு, லண்டனுக்குத் தப்பிச்சென்ற வைர வியாபாரி நிரவ் மோடியை அங்கிருந்து நாடு கடத்தி, இந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.இந்நிலையில், இதுதொடர்பாக வழக்கில் கடந்த மார்ச் மாதம் நிரவ் மோடியை லண்டன் காவல் துறையினர் கைது செய்தனர். தற்போது லண்டனின் வானண்டஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலைக்கு போக சொன்ன மனைவி….. உலகத்தை விட்டே சென்ற கணவர் …!!

வேலைக்குச் செல்லாமல் கணவர் குடிப்பழகத்திற்கு அடிமையாகி இருப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தேனி மாவட்டம் போடி பெரியாண்டவர் கோயில் தெருவில் வசித்துவந்தவர் பாண்டியராஜன்(42). இவருக்கு திருமணமாகி பாக்கியலட்சுமி என்ற மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். பிழைப்பிற்காக பாண்டியராஜன் டிராக்டரை வாடகைக்கு எடுத்து ஓட்டிவந்துள்ளார். பாண்டியராஜன் வேலைக்குச் செல்லாமல் குடிப்பழகத்திற்கு அடிமையாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறுது. இதனால் பாண்டியராஜனுக்கும் பாக்கியலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் பாண்டியராஜனின் தாயார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நான் சாக போகிறேன்…. தற்கொலை செய்வதாக மிரட்டல்…. 4 மணி நேரத்திற்குப் பிறகு மீட்பு….!!

அய்யம்பாளையத்தில் தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டிற்குள் இருந்த எரிவாயுவை பற்ற வைத்து தற்கொலை செய்வதாக மிரட்டிய மகனை நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பின்பு காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் மீட்டனர். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் காசிலிங்கம். இவரது இளைய மகனான கார்த்திக் (27) வேலைக்கு எதுவும் செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் தந்தை காசிலிங்கத்திற்கும், கார்த்திக்கிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அதன் பின்னர் வீட்டை விட்டு வெளியில் சென்ற கார்த்திக் அதிகளவு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அறையில் தூக்கில் தொங்கிய இளைஞர்… தற்கொலைக்கான காரணம் என்ன…?

 தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இளைஞர் ஒருவர், சுந்தர் நகரில் தான் வசித்து வந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் நகர்ப்புறப் பகுதியான சுந்தர் நகரில் வேதாரண்யத்தைச் சேர்ந்த முரளி என்ற இளைஞர் அடுக்கு மாடிக் குடியிருப்பொன்றில் தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். சிறுவாச்சூர் பகுதியிலுள்ள எம்.ஆர்.எஃப். நிறுவனத்தில் வேலை செய்து வந்த அவர், தனது குடும்பத்திலுள்ள பிரச்னைகளை தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறி மன வேதனையில் இருந்ததாக தெரிகிறது. […]

Categories
சென்னை திருச்சி மாவட்ட செய்திகள்

ஐ.டி. கம்பேனியில் வேலைக்குச் சேர்ந்த 2-ஆவது நாளில் இளம்பெண் தற்கொலை..!!

அம்பத்தூரில் ஐ.டி. கம்பேனியில்  வேலைக்குச் சேர்ந்த இளம்பெண், சேர்ந்த 2-வது நாளிலேயே மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். திருச்சியைச் சேர்ந்த  இளம்பெண் தனிதா (வயது  24). இவர் அம்பத்தூரில் இருக்கும் ஐயோபெக்ஸ் டெக்னாலஜி என்ற ஐ.டி. கம்பேனியில்  நேற்று முன்தினம் புதிதாக மென்பொருள் பொறியாளராக பணியில் சேர்ந்துள்ளார். அதன்பின்  நேற்று 2-வது நாளாக  வேலைக்கு  சென்ற தனிதா காலை 10 மணி முதல் மாலை வரை பணிபுரிந்து கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்  தனிதா திடீரென மாலை 6.45 மணியளவில் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் 8-ஆவது […]

Categories
தேசிய செய்திகள்

வெறுத்து ஒதுக்கிய தோழிகள்…. 3 ஆண்டுகள் ஆகியும் என்னை மன்னிக்கவில்லை… 11 ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..!!

உபி.யில் சக மாணவிகளால் புறக்கணிக்கப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவி அவமானத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்பூர் அருகில் உள்ள போகான் என்ற இடத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா என்ற பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் 11ஆம்  வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று காலை ஹாஸ்டலில் உள்ள பிரார்த்தனை கூடத்தில்  தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து   அவர்கள் சம்பவ இடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கு போட்டு தற்கொலை..!!

ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திரபிரதேச மாநிலத்தின்  முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் ராவ். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சிவபிரசாத் கடந்த 2016 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது சட்டப்பேரவை சபாநாயகராக இருந்துள்ளார். இந்நிலையில்   ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் சிவபிரசாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்துள்ளதால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். தற்கொலை குறித்த காரணம் தெரியவில்லை.  முன்னதாக இவர் மீது சட்ட பேரவையில் இருந்து […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

”திருமணத்திற்கு மறுப்பு” காதலன் கண் முன் காதலி தற்கொலை…!!

கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த காதல் திருமணம் செய்ய மறுத்ததால் அவரது கண் முன்னேயே காதலி தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். கள்ளக்குறிச்சியில் ஐந்தாண்டுகளாக நகமும் , சதையுமாக காதலித்து வந்த நிலையில் காதலன் கண்முன்னே 80 அடி ஆழ கிணற்றில் குதித்து திடீரென காதலி தற்கொலை செய்து கொண்டுள்ளார் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிக்கண்ணு வின் மகள் 22 வயதான நிஷா.  நிஷா செவிலியர் பட்டப்படிப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் பரபரப்பு… வகுப்பறையில் +1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை.!!

மதுரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மதுரை மாவட்டம் கே.புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதன்படி இந்த மாணவி இன்று வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் யாரும் வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் தான் வீட்டிலிருந்து கொண்டு வந்த  சேலையால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“யாரும் காரணமில்லை” சிக்கிய கடிதம்…. தமிழக பேராசிரியர் ஒடிசாவில் மனைவியுடன் தற்கொலை…!!

ஒடிசாவில் குழந்தை இல்லாததால் உதவி பேராசிரியர் தனது மனைவியுடன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான ஆர்.ஜெயபாலன் ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலா (Rourkela) வில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT) உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மாலினி (35) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணமாகி கிட்டதட்ட 9 ஆண்டுகள் ஆகிவிட்டது இருப்பினும் இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லை. ஜெயபாலன் தனது மனைவியுடன் ரூர்கேலாவில் உள்ள (NIT) கல்லூரி […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே குடும்பம்… “4 பேரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை…!!

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  கர்நாடக மாநிலத்தின் மைசூர் அருகே உள்ள தட்டாஹள்ளியை சேர்ந்த ஓம்பிரகாஷ் (வயது 36) என்பவர் நிறுவனம் ஒன்றை  நடத்தி வந்துள்ளார். இவரது தந்தை நாகராஜ் பட்டாச்சார்யா (65) ஜாதகம் பார்த்து வருகிறார். அம்மா ஹேமலதா, மனைவி நிகிதா (28),  மகன் ஆர்ய கிருஷ்ணா (4) ஆகியோர் குடும்பத்தினராவர். கடந்த சில மாதங்களாகவே  ஓம்பிரகாஷ் தொழிலில்  நஷ்டம் ஏற்பட்டு மிகவும் மன வேதனையுடன் இருந்து வந்து இருந்துள்ளார்.. இந்நிலையில் ஓம் பிரகாஷ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வி.பி சந்திரசேகர் மரணம் “மிகவும் வருத்தமாக இருக்கிறது” சச்சின் இரங்கல்..!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர் மறைவிற்கு சச்சின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர்  1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 21- ஆம் தேதி சென்னையில் பிறந்தார். 57 வயதான இவர்  சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி,  அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து பின்  பயிற்சியாளராகவும், வர்ணனையாளராகவும்,  ஆலோசகராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் வி.பி சந்திரசேகர் நேற்று மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் இரவு மாடிக்கு சென்று  வேட்டியால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வி.பி சந்திரசேகர் மரணம்” மிகவும் சோகமான செய்தி…. இரங்கல் தெரிவித்த ஹர்பஜன்..!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர் மறைவிற்கு ஹர்பஜன் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர் 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 21- ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர்  சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து பின்  பயிற்சியாளராகவும், வர்ணனையாளராகவும்,  ஆலோசகராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் விபி சந்திரசேகர் நேற்று மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் இரவு மாடிக்கு சென்ற அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தற்கொலை” அதிர்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள்..!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கடை சந்திரசேகர் 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 21- ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் தமிழகம் மற்றும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து பின்  பயிற்சியாளராகவும் […]

Categories
மாநில செய்திகள்

‘கொலை மிரட்டல்’ இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை…!!!!

ஆந்திர மாநிலத்தில் கொலை மிரட்டல் விட்டதால் இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ரத்னஸ்ரீ  என்ற 18 வயது இளம் பெண்ணின் பெற்றோர் சமீபத்தில் உயிரிழந்ததால் தனது பாட்டி வெங்கம்மாவுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒருவருடமாக கல்லூரி சென்று வருகையில் வமிசெட்டி என்கின்ற இளைஞர் ரத்னஸ்ரீயை அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில்  சிறிது வேலையாக வெங்கம்மா வீட்டில் இருந்து வெளியில் சென்றதால்  ரத்னஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.இதை எப்படியோ தெரிந்த கொண்ட வமிசெட்டி அவர் வீட்டிற்குள் சென்று ரத்னஸ்ரீயை கொலை […]

Categories
தேசிய செய்திகள்

அப்பா தவறான உறவு ”மாண்டு போன குடும்பம்” மகள் Whatsapp செய்தி….!!

அப்பாவின் தவறான உறவால் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரில் அரங்கேறியுள்ளது.  பெங்களூருவைச் சேர்ந்த தம்பதிகள் சித்தையா , ராஜேஸ்வரி . இவர்களுக்கு இரண்டு மகள்கள்  மானசா , பூமிகா. இதில் மானசா +2_வும் , பூமிகா 10_ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.48 வயதான சித்தையா மின் வாரியத்தில் வேலை செய்து வருகிறார். சித்தையா_வுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் குடும்பத்தில் தினம் தினம் சண்டை அரங்கேறியுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த சண்டை மொத்த குடும்பமும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றதால் வீபரிதம்.. வாலிபர் தற்கொலை முயற்சி!!..

 மதுஅருந்திவிட்டு இருசக்கரவாகனத்தில்  சென்ற வாலிபர் மீது வழக்கு பதிவு செய்ததால் மனமுடைந்த வாலிபர்  தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். சென்னை ஆவடி,கோவில் பதாகை வண்ணக்குளம் தெருவை சேர்ந்த 23 வயதுடைய கோமத் ஒலாவில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.  இவர் நேற்று இரவு  புரசைவாக்கத்தில் இருந்து பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் ஆவடி செல்லும்   போது வழியில் கீழ்பாக்கம் கெங்கு ரெட்டி சுரங்கபாதை சிக்னலில் காவல் துறையினர் கோமத்தை மறித்து சோதனை செய்தனர்.அப்போது அவர் மது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை…சென்னையில் பரபரப்பு..!!

சென்னை அருகே எஸ் ஆர் எம் கல்லூரியில் 15 ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ஸ்ரீ ராகவ் என்ற மாணவர் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பி-டெக் இறுதியாண்டு படித்து வந்தார்.இந்நிலையில் இளைய சகோதரர் மற்றும் நண்பர்களுடன்  வாடகைக்கு அரை ஒன்றை  எடுத்து தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது.இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற ஸ்ரீ ராகவ் கல்லூரியின் 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து […]

Categories
கல்வி மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை …

விழுப்புரம் மாவட்டத்தில் ,நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் இன்று  ஒரு மாணவி தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.  விழுப்புரம் மாவட்டம், மரக்காணம்  கூனிமேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர்  மோனிஷா.   நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இவர் குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்ததால், மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார் . இந்நிலையில் மோனிஷா, இன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.   மோனிஷா எழுதிவைத்துள்ள தற்கொலை கடிதத்தில், ”தனது தற்கொலைக்கு காரணம் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததே” என குறிப்பிட்டுள்ளார். பின்னர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் பணியாளர் தற்கொலை…!!

கே.கே.நகரில்   பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டம் கே.கே . நகர் அடுத்துள்ள அம்பேத்கர் குடியிருப்பை சேர்ந்தவர் வசந்தி. இவருடைய வயது50. இப் பெண் மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது கணவர் கடந்த 10வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மகன் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார். இந் நிலையில் போதிய வருமானம் இல்லாமல் தனிமையில் வசித்து வந்த வசந்தி கடந்த சில தினங்களாக மிகுந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…!!

முக்கூடல் அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் முக்கூடல் அடுத்துள்ள இலந்தகுளம் கிராமத்தில் வசிப்பவர் செல்வம் என்ற செல்வராஜ்.  30வயதான இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நீண்ட நாளாக தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளார். அவரின் பெற்றோர் செல்வராஜிற்கு  பல பகுதிகளில் பெண் பார்த்தனர். ஆனால் அவருக்கு எந்த பகுதியிலும் பெண் கிடைக்கவில்லை. இதனால் மகனுக்கும், பெற்றோருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது  விரக்தியான செல்வராஜ் வீட்டிற்குள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“விழுப்புரம் அருகே பெண் தீக்குளிப்பு” போலீசார் தீவிர விசாரணை…!!

மேல்மலையனூர் அருகில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் புதூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்த விவசாயி கன்னியப்பன்.இவரின் மனைவி செல்வராணி .45 வயதான இவர் நேற்று முன்தினம் வீட்டில் மண்ணெண்ணெய்  ஊற்றி கொண்டு தீவைத்துக் கொண்டார். அவரின் அலறல் சத்ததை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து செல்வராணியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  மேலும் அவரை மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“இளம் பெண் தீ குளித்து தற்கொலை” உதவி ஆட்சியர் விசாரணை…!!

கீழ்பென்னாத்தூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து திருவண்ணாமலை உதவி மாவட்ட  ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த வேடநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், இவர் கூலி தொழிலாளியாக பனிப்புரிகிறார் . இவரது மனைவி இந்துஜா 21 வயது  .இவர்களுக்கு திருமணமாகி 2 வயதான ஹரிணி மற்றும் 4 மாதத்தில் சுகாசினி என்ற இருமகள்கள் உள்ளனர். இந்துஜாவிடம் அவரது கணவர் கார்த்திகேயனும், மாமியார் சேர்ந்து அடிக்கடி தகராறு செய்வதால்   தனது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“என் சாவுக்கு இவரே காரணம்”…. மனமுடைந்து தற்கொலை செய்த தையல்காரர்…!!

என் சாவுக்கு வீட்டின் உரிமையாளரே காரணம்  என கடிதம் எழுதிவைத்து தையல்காரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அருகில்  பரணிபுத்மர் பகுதியை அடுத்து   சீனிவாசா  நகரில் உள்ள திலகாவுக்கு  சொந்தமான வீட்டில் டேவிட்ராஜ் என்பவர் வாடகைக்கு குடி இருந்தார் . 47 வயதான இவர் தையல்காரராக இருந்தார். திலகா தொடர்ச்சியாக  டேவிட்ராஜ் வீட்டிற்கு சென்று  ஊர் கதைகளை பேசியதாக கூறப்படுகிறது. இதை டேவிட்ராஜின் தாய் கண்டித்துள்ளார். இதனால்  இவர்களுக்குள்  வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டை தொடரந்ததால்  வீட்டை காலி செய்யும்படி திலகா கூறியுள்ளார். இதனையடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து தற்கொலை…. கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

எறும்புக்காடு வைரக்குடியினை சார்ந்த ஜெகன் என்பவர் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்ததால் நாகர்கோவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி  மாவட்டம் நாகர்கோவிலின்  எறும்புக்காடு வைராக்குடி பகுதியில் வசித்துவருபவர் ஜெகன். 31 வயதான ஜெகன்னுக்கு இன்னும் திருமணம்  ஆகவில்லை.  இவர் கூலித் தொழிலாளியாய் பணிபுரிந்து வருகின்றார்.சம்பவத்தன்று  ஜெகன் தளவாய்புரம் சாலையில் மதுவில் விஷம் கலந்து அருந்திவிட்டு  மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். சுயநினைவின்றி கிடந்த  ஜெகனை  பொதுமக்கள் மீட்டு  சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிரசிகிச்சை பெற்றுவந்த அவர்  நேற்றிரவு சிக்கிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.இது   குறித்து  போலீசார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை…. இரணியில் சோகம் …!!

இரணி  அருகே 8_ஆம்  பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் இரணி  காரங்காட்டில் உள்ள நுள்ளிவிளையைச் சேர்ந்தவர் பால்ராஜ். அஜிஷா எனும் இவரின் மகள்  நாகர்கோவிலில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகளுக்கு  இறுதித்தேர்வு நடைபெற்று வருகிறது. அஜிஷா நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு இறுதிதேர்வினை  எழுத சென்றிருக்கிறார் . தேர்வு எழுதி முடித்தி விட்டு மாலை வீட்டிற்கு திரும்பிய அஜிஷா சிறிது நேரம் விளையாடி வந்துள்ளார்.திடீரென அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து அவரது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சத்தியமங்களம் அருகே கூலித்தொழிலாளி தற்கொலை…!!

 தஞ்சாவூர் அருகே தொழிலாளி வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்  கபிஸ்தலம் அடுத்துள்ள  சத்தியமங்களம் ஊராட்சியில் வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த  ராமலிங்கம்  (வயது 60) . இவர் விவசாயக்கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில்  தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். மேலும் வயிற்றுவலி அதிகமானதால் மனமுடைந்த கூலித்தொழிலாளி வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். மயங்கிய ராமலிங்கத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  இறந்தார். இச் சம்பவம் குறித்து அவரது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விடுதியில் மாணவர் தற்கொலை..!போலீசார் தீவிர விசாரணை…!!

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில்  பொறியியல் கல்லூரி மாணவர் பெண்  வேடமிட்டபடி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஸ்ரீசக்தி பொறியியல் கல்லூரியில்  கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த எபின் ராபர்ட் என்ற மாணவர் எந்திரவியல் 3 ‘ஆம் ஆண்டு படித்து வந்தார்.கல்லூரி விடுதியில் தங்கி இருந்த எபினுக்கு நீண்ட நாட்களாகவே பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை இருந்ததாகச் தெரிவித்தனர். விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில்  பெண்கள் அணியும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை…!

சென்னை அருகே உள்ள பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியர் தூக்கு போட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அடுத்து பாண்டியன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நாகர்கோயிலைச் சேர்ந்த ஜெனிஃபர் என்ற ஆசிரியை பணியாற்றி வந்ததார். இவர் கடந்த ஒரு வருட காலமாக பள்ளி வளாகத்திலேயே தங்கி 9, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொருளியல் பாடம் எடுத்து வந்தார். இந்நிலையில் அவர் தங்கிய அறையில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குபோட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவர் தற்கொலை…!!

பொள்ளாச்சியில் மதுபோதைக்கு அடிமையானதை மனைவி தட்டி கேட்டதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள சூளேஸ்வரன்பட்டியில் வசித்து வரும் கூலித் தொழிலாளியான  அருண் என்ற கங்காதரன்  வயது 23 இவரது மனைவி ஜோதி சரண்யா வயது 20  இவர்களுக்கு திருமணமாகி இரண்டரை வருடமாகிய நிலையில் கங்காதரன் தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் கணவன் – மனைவிக்கும் தகராறு முற்றியதால் மிகுந்த மனவேதனை […]

Categories

Tech |