தம்பதியினாரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அக்ராபாளையம் காலனி பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷர்மிளா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் 2 வயதில் லிங்கேஷ் மற்றும் லித்ஷாஸ்ரீ என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஷர்மிளா வீட்டில் யாருமில்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]
