தாய்-தந்தை உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் ஜானகிராமன் காலனியில் கோபாலசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கேண்டீன் நடத்தி வந்துள்ளார். இவருக்கு பானுமதி என்ற மனைவியும், கண்ணபிரான் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் கண்ணபிரான் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கோபாலசாமி தனது மனைவி மற்றும் மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். […]
