12- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி(17) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் படிக்காமல் விளையாடிக் கொண்டிருந்த கௌரியை அவரது தாய் மங்களநாயகி கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கௌரி தனது வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். […]
