தானியங்களை உலர வைப்பதற்காக உலர் களம் அமைத்துத் தருமாறு அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்யும் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் சோளம், கம்பு, மக்காச்சோளம் போன்ற மானாவாரி விவசாய பயிர்களை விவசாயம் செய்து, அந்த பயிர்களை உரிய இடம் இல்லாததால் சாலையில் போட்டு அதனை விவசாயிகள் உலர்த்துகின்றனர். இந்நிலையில் அந்த பயிர்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த […]
