ஈரோட்டில் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கள்ளக் காதலனை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கதிரம்பட்டியைச் சேர்ந்த காளிமுத்துக்கு சுதா (வயது34) என்ற மனைவியும், 1 மகளும் 2 மகன்களும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் காளிமுத்து பிட்டராக வேலை பார்த்தும், மேட்டுகடை பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் சுதா வேலை பார்த்தும் இருவரும் குடும்பத்தை நடத்தியும் வந்தனர். இந்நிலையில் சுதா செல்போன் கடைக்கு கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லவில்லை. சம்பவம் நடந்த அன்று குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கும், காளிமுத்து வேலைக்கும் சென்று விட்டனர். வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்த காளிமுத்து சுதா வீட்டில் இல்லை என்று தெரிந்தது. மேலும் அக்கம் […]
