திண்டுக்கல்லில் மனைவி இல்லாத ஏக்கத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நாடார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரணன். இவர் கூலி தொழிலாளி ஆவார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பவித்ரா கடந்த சில மாதங்களாகவே கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். […]
