பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவரது தந்தை அளித்த விண்ணப்பத்தை நான்கு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத டிஜிட்டல் பேனர் வழக்கு மற்றும் பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு மற்றும் 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவரது தந்தை தொடுத்த வழக்குகள், நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு […]
