சப்-இன்ஸ்பெக்டர் ஒரு பெண்ணை தாக்கியதோடு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் அபிநயா என்ற பெண் வசித்து வருகிறார். இந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரை விட்டுப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அபிநயாவின் விவாகரத்து வழக்கை ரேஸ்கோர்ஸ் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் பார்த்திபன் என்பவரின் தம்பியான வழக்கறிஞர் நடத்தி வந்துள்ளார். அப்போது அபிநயாவிற்கும், பார்த்திபனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு […]
