கியாஸ் சிலிண்டரை திறந்து வைத்து தீ வைத்து விடுவதாக சப்-இன்ஸ்பெக்டர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள நெத்திமேடு பகுதியில் போலீசாருக்கான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குடிபோதையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு சென்று குடியிருப்பு வளாகத்தில் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனை அங்கு வசிக்கும் போலீஸ் குடும்பத்தினர் தட்டி கேட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கியாஸ் […]
