உபா திருத்த சட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அதனை ஏற்கவே முடியாது என்றும் மாநிலங்களவையில் வைகோ பேசினார் . மாநிலங்களவையில் உபா திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் விவாதித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து மாநிலங்களவையில் பேசிய வைகோ, சிறுபான்மையினரின் குரலை கொடுக்கவே சட்டவிரோத நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கு உபா திருத்த சட்டம் மேலும் உதவுவதாகவும் தெரிவித்தார். அவசர நிலை காலத்தில் இவ்வகையான சட்டங்களின் மூலம் திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். வாஜ்பாய் […]
