மசோதாவுக்கு எதிராகவும் டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள், திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இப்போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருபுறம் இருந்து கல்லெறித்தாக்குதல் நடைபெற்றது. இதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து […]
