17 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் இருந்த பள்ளிக்கு தேர்தல் வருவதால் மின்சாரம் வந்துள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி பகுதியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளது பெரியநாயக்கம்பாளையம் . இந்த பகுதியில் ஒரு அரசு நடுநிலை பள்ளி ஒன்று கடந்த 17 ஆண்டுகளாக செயல்பட்டுக்கொண்டு வருகின்றது . பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் தடாகம் என்ற வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் என சுமார் 47 பேர் படிக்கின்றனர். […]
