அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சிகள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரத்தில் இருக்கும் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பள்ளியின் மையப்பகுதியில் தலைமை ஆசிரியர் அறையுடன் கூடிய அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தலைமை ஆசிரியை இருக்கையில் முன்பு […]
