பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சூளாங்குறிச்சி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 150-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் அறிவியல் பாடம் நடத்தி வருகின்ற பட்டதாரி ஆசிரியர் பன்னீர்செல்வம் வேறு பள்ளிக்கு பணிநிரவல் மூலமாக இடம் மாறுதலாகி செல்ல இருக்கிறார். இதனை அறிந்த மாணவ-மாணவிகள் ஆத்திரமடைந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அறிவியல் பாட ஆசிரியர் பன்னீர்செல்வத்தை இடமாற்றம் […]
