ராட்சத அலையில் சிக்கி மாயமான மாணவனை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் ஏஜாஸ்(17) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஏஜாஸ் தனது நண்பர்களான மகேஷ்குமார், கிஷோர்குமார், ஜெகதீஸ் ஆகியோருடன் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தோன்றிய ராட்சத அலை ஏஜாஸை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் […]
