ஐடிஐ மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறையில் பழங்குடியின மக்களுக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தர்மபுரியை சேர்ந்த பிரவீன் குமார்(18) என்பவர் படித்து வருகிறார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். நேற்று காலை பிரவீன் குமார் தனது நண்பர்களுடன் பெருஞ்சூர் ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக புதைமணலில் சிக்கிக்கொண்ட பிரவீன் குமார் காப்பாற்றுமாறு கையை உயர்த்தியுள்ளார். அவரது நண்பர்கள் விளையாட்டாக கையை காட்டுவதாக […]
