வங்கி ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் கேட்டு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வேண்டி சமர்ப்பித்த கோரிக்கை சாசனங்கள் மீது உடனடி பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற கூட்டுறவு வாங்கி ஊழியர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சம்பத் தலைமை தாங்கியுள்ளார். […]
