தங்குவதற்கு இடம் கேட்டு மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு பெய்த மழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வால்பாறை கல்லார்குடியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பாதிக்கபட்டனர். அதன் பிறகு அவர்களுக்கு தாய்முடி எஸ்டேட் தனியார் தேயிலை தோட்ட குடியிருப்பில் தங்குவதற்கான இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தெப்பக்குள மேட்டில் இடம் வழங்கக்கோரி மலைவாழ் மக்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பில் வனத்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. […]
