அரசு அனுமதி அளித்த போதும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஏராளமான கடைகள் திறக்கப்படாமல் இருந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு இன்று முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்காக குவிந்தனர். ஆனால் தொட்டியம் கடை வீதியில் இருக்கும் பெரும்பாலான கடைகள் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இது குறித்து வியாபாரிகள் கூறும் […]
