மும்பை பங்குச்சந்தையில் இன்று சென்செக்ஸ் குறியீடு 1,421.90 புள்ளிகள் மற்றும் நிஃப்டி குறியீடு 421.10 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்ககளாக அறிவிக்கப்பட்டு நேற்று கடைசியாக 7வது கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று, இந்தியப் பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கின. தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியான நிலையில், 2014 ஆம் ஆண்டைப் போலவே பா.ஜ.க அதிக தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இன்று […]
