அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் மோதலால் உலகளவில் பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவிற்குமிடையில் அதிகரித்துவரும் போர் பதற்றங்களால் உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலை எதிர்பாராத வகையில் உயர்ந்துள்ளது. மேலும் டோக்கியோ பங்குச்சந்தை கிட்டத்தட்ட இரண்டு விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. ஹாங்காங்கின் பங்குச்சந்தை ஏறக்குறைய ஒரு விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. அதேபோல் ஷாங்காய், சிட்னி, தென்கிழக்கு ஆசிய சந்தைகளும் சரிவை சந்தித்தன. ஈராக்கில் உள்ள இரண்டு விமானத் தளங்களுக்கு எதிரான ஏவுகணைத் தாக்குதல் பற்றிய செய்தி வெளியான நிலையில், டோக்கியோ […]
