சொத்துக்காக வளர்ப்புத் தந்தையை தாக்கி விட்டு தலைமறைவான வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கொரடாச்சேரி பகுதியை சார்ந்தவர் கோவி மணி. இவர் தனக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் தனது உறவினர் மகனான ராஜ் என்பவரை எடுத்து வளர்த்து வந்துள்ளார். ராஜ்க்கு தற்போது திருமணமாகி நீண்டமங்களத்தில் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று தனது வளர்ப்புத் தந்தையிடம் வந்து சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். இதற்கு கோவி மணி பொறுமையாக இருக்குமாறு கூறியுள்ளார். இதனை […]
