உடைந்த நிலையில் இருந்த ஆயிரம் ஆண்டு கால பழமையான அய்யனார் சிற்பத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள லட்சுமணம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பண்டிதர் குடிவயல் கிராமத்தின் கண்மாயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அய்யனார் சிற்பம் உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கீரனூர் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் கூறும் போது இரண்டாக உடைந்த நிலையில் அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது 4 அடி உயரமும், 2 1/2 அடி அகலமும் உடையதாகும். பொதுவாக அய்யனார் சிலைகள் இடது காலை […]
