ஜி7 மாநாடு தனக்கு சொந்தமான விடுதியில் நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு ஜூன் 10 – 12ஆம் தேதி வரை ஜி7 உச்சி மாநாடு அமெரிக்காவில் நடக்கவுள்ளது. புகழ்பெற்ற இந்த மாநாடு நடத்தப்படும் இடங்களைத் தேர்வுசெய்யும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த மாநாடு அமெரிக்க ட்ரம்புக்கு சொந்தமான ‘ட்ரம்ப் தேசிய டோரல் மியாமி’ விடுதியில் நடைபெறும் என்று கடந்த வியாழக்கிழமை அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. […]
