அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தீவிர கனமழையால் காசிரங்கா தேசிய வனவிலங்கு பூங்காவில் இதுவரை 141 வன விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. அசாம் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த தீவிர மழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அம்மாநிலத்தில் இருக்கும் காசிரங்கா வனவிலங்கு பூங்காவில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் வன விலங்குகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன. மேலும் வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 141 வனவிலங்குகள் உயிரிழந்துள்ளது. காசிரங்கா பகுதியில் காணப்படும் அரியவகை காண்டாமிருகம் பெரிதும் […]
