பொங்கல் திருவிழா என்றாலே நாம் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது ஜல்லிக்கட்டு தான். பொங்கல் திருநாளான இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு திருவிழாவானது நடைபெற்றுவருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முடிந்தவுடன் இந்த சிறப்பு பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
