Categories
மாநில செய்திகள்

‘கொலை மிரட்டல்’ இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை…!!!!

ஆந்திர மாநிலத்தில் கொலை மிரட்டல் விட்டதால் இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ரத்னஸ்ரீ  என்ற 18 வயது இளம் பெண்ணின் பெற்றோர் சமீபத்தில் உயிரிழந்ததால் தனது பாட்டி வெங்கம்மாவுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒருவருடமாக கல்லூரி சென்று வருகையில் வமிசெட்டி என்கின்ற இளைஞர் ரத்னஸ்ரீயை அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில்  சிறிது வேலையாக வெங்கம்மா வீட்டில் இருந்து வெளியில் சென்றதால்  ரத்னஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.இதை எப்படியோ தெரிந்த கொண்ட வமிசெட்டி அவர் வீட்டிற்குள் சென்று ரத்னஸ்ரீயை கொலை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு இன்று வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அனல் காற்றும்  வீசுவதால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஆனால் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால்  பொதுமக்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளார்கள். இருந்தாலும் கோடை மழையை தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நரேந்திர மோடி….!

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளைக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 65-வது பிறந்தநாள் ஆகும். தேர்தல் பிரசாரத்துக்காக திருப்பரங்குன்றம் சென்ற அவர் இன்று காலையில் மதுரையில் தங்கி இருந்துள்ளார். அப்போது அவர் தனது பிறந்த நாளைக்கூட கொண்டாடாமல் எளிமை காட்டிக்கொண்டு வழக்கம் போல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை தெரிந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை […]

Categories
மாநில செய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி 1 கோடி பணம், சொத்து ஆவணம் பறிப்பு….!!

சென்னை துரைப்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி ஒரு கோடி பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் முகமது தாகிர். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். முகமது தாகிரிடம் துரைப்பாக்கத்தை சேர்ந்த சிலர் புறம்போக்கு நிலம் தொடர்பாக கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் முகமது தாகிரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் சொத்து […]

Categories
மாநில செய்திகள்

1முதல் 5 வரை படிக்கும் குழந்தைகளுக்கு சத்துணவில் தினமும் பால் வழங்க தமிழக அரசு யோசனை…..!!

தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் தினமும் பால் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜரால் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. இது காலப்போக்கில் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. தற்போது பள்ளி சத்துணவில் மாணவ-மாணவிகளுக்கு 13 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. இதில் 1 முட்டையும் வழங்கப்படுகிறது. தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தினமும் காலையில் ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக தயாரா…!! துரைமுருகன் கேள்வி….!!

எனது இடத்தில் வருமான வரித்துறை கைப்பற்றியதை ரூ.13 கோடி பணத்தை முதல்-அமைச்சர் நிரூபிக்க வில்லை என்றால் பதவி விலக தயாரா? என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு சொந்தமான இடத்தில் 12 கிலோ தங்கம், ரூ.13 கோடி பணத்தை வருமான வரித்துறை கைப்பற்றியதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்தால் நான் பதவி விலக தயாராக இருக்கிறேன். நிரூபிக்க வில்லையென்றால் முதல்-அமைச்சர் பதவி விலகத் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். எங்கள் வீடு […]

Categories
மாநில செய்திகள்

குடிபோதையில் கார் ஓடி விபத்து…. மூதாட்டி உட்பட 2 பேர் பரிதாப பலி…!!

சென்னை வில்லிவாக்கத்தில் குடிபோதையில் ஒருவர் கார் ஓட்டியதில் விபத்துக்குள்ளாகி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  சென்னை வில்லிவாக்கத்தில் குடி போதையில் ஒருவர் கார் ஓட்டியதில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். கார் மோதியதில் மூதாட்டி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மது போதையில் சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் தப்பி ஓட முயற்சி செய்தார். அப்போது பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….. பீதியில் பொதுமக்கள்….!!

பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர், இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வரும் பயணிகளின் உடைமைகள் மற்றும் அவர்களை போலீசார் தீவிர சோதனை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகிறார்கள். பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

12 மணி நேரத்தில் வலுப்பெறும் “ஃபனி புயல்”….. தமிழகம், புதுச்சேரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை…!!

வங்கக் கடலில் உருவான ஃபனி புயல், சென்னையை நெருங்க வாய்ப்பு குறைவு என்றும், கடலோர பகுதிகளை தாக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது புயலாக மாறி கடலோர பகுதிகளை தாக்க அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். ஆனால் தற்போது இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“8 மாநிலங்களில் வெடிகுண்டு தாக்குதல்” பொய் தகவல் அளித்த மர்ம ஆசாமி கைது…!!

தமிழகம் பல முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் பெங்களூரு போலீசாருக்கு பொய் தகவல் அளித்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஓசூரில் இருந்து நேற்று பகலில் மர்ம நபர் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்புகொண்டு ஒரு திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அதில் தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, மராட்டியம், தெலுங்கானா, கோவா உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்களில், குண்டு வெடிக்கும் என்றும், ராமநாதபுரத்தில் இதற்காக 19 பயங்கரவாதிகள் நுழைந்திருக்கிறார்கள் என்றும், குறிப்பாக தென்னக ரெயில்களில் குண்டு வெடிக்க அதிக வாய்ப்பு  உள்ளதாகவும் தகவலை சொல்லிவிட்டு அந்த […]

Categories

Tech |