விமானத்தில் வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற நட்சத்திர ஆமைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்திற்கு சரக்கு விமானம் ஒன்று செல்வதற்கு தயாராக இருந்துள்ளது. இந்நிலையில் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் கொண்டு செல்வதற்காக வைத்திருந்த பார்சல்களை சோதனை செய்து பார்த்துள்ளனர். இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் 15 பெட்டிகளை தாய்லாந்திற்கு கடத்த முயன்ற 2247 நட்சத்திர ஆமைகளை கண்டுபிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பார்சலில் எழுதியிருந்த முகவரியை […]
