IT துறையின் வளர்ச்சிக்கு திமுக தான் முக்கிய காரணம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை போட்டியிடுகின்றார். இந்நிலையில் இவரை ஆதரித்து சோழிங்கநல்லூரில் உள்ள கண்ணகி நகரில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது . இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் , திமுக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய முக.ஸ்டாலின் , அனைவரும் படிக்க வேண்டும் என்று […]
