Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

வேலூரில் திண்ணை பிரச்சாரம்… ஸ்டாலினிடம் கிராம மக்கள் கோரிக்கை..!!

வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்  வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் தொகுதியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை  தொடர்ந்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது தீவிரமான பிரச்சாரங்கள் அரசியல் கட்சிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

BREAKING : மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல்… தேர்தல் அதிகாரிகள் அதிரடி..!!

வேலூரில் முன் அனுமதி பெறாமல் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்திய தனியார் மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தல் தமிழகத்தில் வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று தேர்தலை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம்  அறிவித்ததையடுத்து, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு பிரச்சார பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கான விதிமுறைகள் வேலூர் தொகுதியில் அமுலுக்கு வந்தது. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞர் சிலை திறப்பு விழா… அன்பழகனுக்கு மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பு..!!

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனை  நேரில் சந்தித்த  மு.க ஸ்டாலின் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். சென்னை  முரசொலி அலுவலக வளாகத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களின்  உருவ சிலையானது ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று  திறக்கப்பட உள்ளது.  இந்த விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பதற்காக திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை  சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கே  சென்று  மு.க.ஸ்டாலின் சந்திக்க சென்றார். இதையடுத்து உடல்நலம் குன்றி வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் அன்பழகனை சந்தித்த ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அ.தி.மு.க. தொண்டரை யாரும் தொட்டு பார்க்க முடியாது” முதல்வர் அதிரடி …!!

எந்த உண்மையான அ.தி.மு.க. தொண்டரையும் யாரும் தொட்டு பார்க்க முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் தோல்விக்கு பின் TTV தினகரனின் கூடாரம் சரிய தொடங்கியது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் திமுகவுக்கும் ,அதிமுகவிற்க்கும் சென்றனர். அமமுக தங்கத்தமிழ் செல்வனும் திமுகவில் இணைந்த்தார். இந்நிலையில் தேனி மாவட்டத்தின் அமமுக_த்தினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின்  அதிமுகவுக்கு வைத்துக்கொண்டிருக்கும் உண்மையான தொண்டர்கள் […]

Categories
அரசியல் தேனி மாநில செய்திகள்

கலைஞரோ..ஜெயலலிதாவோ.. முதல்வராக இருந்திருந்தால் நீட் வந்திருக்காது…. ஸ்டாலின் அசத்தல் பேச்சு..!!

ஜெயலலிதாவோ கருணாநிதியோ முதலமைச்சராக இருந்திருந்தால் நீட் தேர்வு தமிழகத்தில் வந்திருக்காது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கலைஞர் திடலில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அண்மையில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர். நிகழிச்சிக்கு பின் பொது கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தங்க தமிழ்ச்செல்வனை ஏற்கனவே தங்கள் பக்கம் இழுப்பதற்கு பலமுறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அணை பாதுகாப்பு மசோதா… எதிர் குரல் அதிமுக MPக்கள் மூலம் ஒலிக்கும்… முதல்வர் பேட்டி…!!

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து  அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில், நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விதி 110இன் கீழ் பேசிய முதல்வர், அணை பாதுகாப்பு மசோதா குறித்து சட்டப்பேரவையில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசிய மு க ஸ்டாலின் அணை பாதுகாப்பு மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக குறைகளை புட்டு புட்டு வைத்த மக்கள்… மனம் நெகிழ ஸ்டாலின் நன்றி… வைரலாகும் ட்விட்டர் பதிவு..!!

திமுக மீதி நம்பிக்கை கொண்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் மனம் நெகிழ பதிவிட்டுள்ளார். நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் திராவிட முன்னேற்றக்கழகம் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி வாகை சூடியது மக்கள் தங்கள் மீது வைத்திருந்த இந்த நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும் விதமாக அதிமுக அரசின் குறைகளை கண்டறியவும் திமுகவின் நிறைகளை தெரிந்து கொள்ளவும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“7பேர் விடுதலை” மு.க.ஸ்டாலின் கேள்வியும்… OPSஇன் பதிலும்…!!

தமிழகத்தில் 7 பேர் விடுதலை குறித்து பேரவையில் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு துணை முதல்வர் O.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டநாள்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களின் விடுதலை தமிழக ஆளுநரின் ஒற்றை கையெழுத்திற்க்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் காலம் கடத்துவதன் காரணமாக எதிர்க்கட்சிகள் சமூகஆர்வலர்கள் உள்ளிட்டோர் நீதிமன்றத்தை நாடினர். ஆனால் நீதிமன்றமும் இவ்விவகாரத்தை பொறுத்த வரையில் ஆளுநர் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று  கைவிரித்துவிட்டது. இந்நிலையில் இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை… மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு…!!

தமிழகத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை என்பதே திமுகவின்  நிலைப்பாடு என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத் தொடரின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் முடிவில்  பேசிய, திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும் என்றும், இம்மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்த அவர், அதற்கு எதிராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசு மசோதாவிற்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம்…. பேரவையில் ஸ்டாலின் அதிரடி..!!

மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு  மசோதாவிற்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விவாதங்களின் முடிவில் ஒவ்வொரு நாளும் விதி 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார். அதன்படி, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதாவை பேரவையில் முதல்வர் தாக்கல் செய்தார். இதை எதிர்த்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவினர் அன்பழகனையும் நியாபகம் வைத்து கொள்ளுங்கள்…. அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் பேச்சு..!!

பேரவையில் இன்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அவர்களை நினைவில் கொள்ளுமாறு அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்து பேசினார். சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் பேசத் தொடங்கும் முன்பு கலைஞர்,திமுக தலைவர் ஸ்டாலின்,இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு பேசத் தொடங்குவது வழக்கம். இதனை தொடர்ந்து இன்று செய்தித் துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்ட […]

Categories
அரசியல்

தமிழ் தொன்மையை அழிக்க சதி…. ஸ்டாலின் குற்றசாட்டு..!!

தமிழின் தொன்மையை அளிக்க சதி திட்டம் தீட்டப்படுவதாக திமுக தலைவர்   ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழுக்கு சிறந்த தொண்டுகளாற்றிய அறிஞர்கள் குறித்து கவி பேரரசு வைரமுத்து எழுதிய தொகுப்பான தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவானது சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் திமுக தலைவர்  ஸ்டாலின் நூலை வெளியிட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அதனை பெற்றுக் கொண்டார். இதையடுத்து விழாவில் பேசிய ஸ்டாலின், தமிழ் மொழியின் தொன்மையையும், திராவிட இனத்தின் பெருமைகளை சிதைக்கவும், தமிழ் மக்களின்  உரிமைகளை  பறிக்கவும்  சதி திட்டம் தீட்டப்படுவதாக குற்றம் சாட்டினார். இவரை தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்துத்துவா படையெடுப்பை எதிர்ப்பேன்…வைகோ பேட்டி..!!

மதச்சார்பின்மைக்கு எதிராக இருக்கும் இந்துத்துவா படையெடுப்பை எதிர்ப்பேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 புதிய MPக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முகமது ஜான், சந்திரசேகர், பாமக அன்புமணி ராமதாஸ் ஆகிய 3 பேர் மற்றும் திமுக சார்பில் போட்டியிட்ட  சண்முகம்,வில்சன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகிய 3 பேர் என மொத்தம் 6 பேர் தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட வைகோ உள்ளிட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் ஏன் பங்கேற்கவில்லை….ஸ்டாலின் கேள்வி..!!

10% இடஒதுக்கீடு தொடர்பாக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஏன் பங்கேற்கவில்லை? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  10% இடஒதுக்கீடு குறித்து அனைத்து கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு வந்த கட்சிகள் எதன் அடிப்படையில் அழைக்கப்பட்டன என்றும்,வருகை தந்த அனைத்து கட்சிகளும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தான? என்றும்  திமுகவை சேர்ந்த துரைமுருகன் சட்ட பேரவைக் கூட்டத்தில்  கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதன் அடிப்படையில் அழைப்பு […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் விதிகளை மீறுகிறீர்களா??…அமைச்சரிடம் ஸ்டாலின் கேள்வி..!

வேலூரில் தேர்தல் நடத்தை   விதிமுறைகள்      அமலுக்கு     வந்தநிலையில்  புதிய  அறிவிப்புகளை வெளியிடுவது விதிமீறல் ஆகாத? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நேற்று புதிய அறிவிப்புகளை  மின்துறை அமைச்சர் தங்கமணி வெளியிட்ட போது , வேலூர் மாவட்டத்திற்கும்  சேர்த்து அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில்  இறுதி நேரத்தில் பேசிய திமுக  தலைவர் ஸ்டாலின், வேலூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தநிலையில், புதிய அறிவிப்புகளை வெளியிடுவது தேர்தல் விதிமீறல் ஆகாதா என்று கேள்வி எழுப்பினார். ஸ்டாலின் கேள்விக்கு  […]

Categories
அரசியல்

கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை..!!

திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகிறார். திரைப்பட நடிகராகவும் முரசொலியின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றார். இதனை தமிழகம் முழுவதும் தற்போது திமுக தொண்டர்கள் உதயநிதி ரசிகர்கள் உள்ளிட்டோர் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில் இளைஞரணி  செயலாளராக பொறுப்பேற்ற பின் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து  பெற்றார். இதனை  தொடர்ந்து, சென்னை […]

Categories
அரசியல்

அன்பழகனிடமிருந்து வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின் ..!!

இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற உதயநிதி திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில்  திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது  திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனை தற்போது தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பின் […]

Categories
அரசியல்

“இளைஞரணி செயலாளரானார் உதயநிதி” ஸ்டாலினுடன் வாழ்த்து…

இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பின் ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில்  திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது  திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனை தற்போது தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கக்கூடிய  அவரது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி “தமிழகம் முழுவதும் கொண்டாடும் தளபதி தொண்டர்கள்..!!

இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது.   இந்நிலையில் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10% இடஒதுக்கீடு “கொடிய விஷம் கொண்ட பாம்பு” ஸ்டாலின் விமர்சனம் …!!

கொடிய விஷம் கொண்ட பாம்பு என்று பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீட்டை திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை கடந்த மத்திய பாஜக அரசு  நிறைவேற்றியது. ஆனால் தமிழகம்  இந்த சட்ட மசோதாவை எதிர்த்து வந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற தமிழக சட்டபேரவை கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலின்  நீட் தேர்வில்  சமூக நீதியை பறிகொடுத்து விட்டோம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத […]

Categories
அரசியல்

சட்டப்பேரவை கூட்டம்: விவாத பொருளாக மாறிய அணுக்கழிவு மையம் ..!!

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாளான இன்று வனத்துறை மற்றும் சுற்றுசூழல் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் குறித்து பேசப்படவுள்ளன. கடந்த 28ஆம் தேதியன்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத் தொடரின் முதல் நாளன்று மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி கூட்டத்தை மறுநாளன்று  ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இன்று நடைபெற இருக்கக்கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன. எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்பு தீர்மானம்: அதன்படி கல்வித் துறை ரீதியான கேள்விகளை ஓ.பன்னீர்செல்வம் எழுப்ப […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாடு.!ஒரே ரேஷன் கார்டு.!”தேன் கூட்டில் கல் எறிவதற்கு சமம் “ஸ்டாலின் எச்சரிக்கை..!!

மாநில அரசின் அடிப்படை உரிமைகளில் கை  வைப்பதுதேன் கூட்டில் கல் எறிவதற்கு சமம் என்று  ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில்  வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். இதன் மூலம் இந்திய மக்களை எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்று […]

Categories
அரசியல்

குடும்ப அரசியல் செய்யும் திமுக புலி அல்ல பூனை…தமிழிசை விமர்சனம்..!!

திமுக புலி அல்ல பூனை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். அமமுகவிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் விலகி திமுகவில் தனது தொண்டர்களுடன் சென்று இணைந்து அரசியல் களத்திலேயே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். இவரது செயல் அதிமுக அமமுக மற்றும் பிற கட்சிகள் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி அதிக அளவிலான விமர்சனங்கள் இதுகுறித்து பேசப்பட்டன. தற்பொழுது இது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் […]

Categories
அரசியல்

“ஆட்சி கவிழும் என்று 2 வருடங்களுக்கு ஸ்டாலின் கூவிக்கொண்டேதான் இருப்பார் “அமைச்சர் கேலி பேச்சு..!!

அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று இன்னும் 2 வருடங்களுக்கு ஸ்டாலின் சொல்லிக்கொண்டே தான் இருப்பார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அமமுகவில்  இருந்து விலகி தங்க தமிழ்ச்செல்வன் திமுக கட்சியில் தனது தொண்டர்களுடன் சென்று இணைந்தார். இது அரசியல் களத்திலையே  மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிமுக கட்சியை சேர்ந்த பலர் இதனை விமர்சனம் செய்தனர். குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் இணைந்திருந்தால் நிரந்தர ஹீரோவாக இருந்திருப்பார்,  ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாக்காளர்களுக்கு நன்றி “அரவக்குறிச்சி சென்ற ஸ்டாலின்” புதுமண தம்பதிக்கு ஆசிர்வாதம்..!!

 திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க அரவக்குறிச்சி சென்ற போது அங்கு புதுமண தம்பதிக்கு ஆசிர்வாதம்  வழங்கினார். சமீபத்தில் நடந்து முடிந்த  மக்களவை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 38 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் சட்ட பேரவை  இடைத்தேர்தலிலும் திமுக 13 தொகுதிகளை கைப்பற்றியது. திமுக கைப்பற்றிய தொகுதிகளில் கட்சியில் தன்னை இணைத்து கொண்ட செந்தில் பாலாஜி போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதியும் ஒன்றாகும். இந்த நிலையில், வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்க்கு தி.மு.க. […]

Categories
அரசியல்

“தற்கொலை குறித்து ஏன் பேசவில்லை ?..”ஸ்டாலினிடம் தமிழிசை சரமாரி கேள்வி ..!!

நீட் தேர்வு குறித்து விமர்சிக்கும் அரசியல் தலைவர்கள் மாணவர் தற்கொலை குறித்து ஏன் பேசவில்லை என்று தமிழிசை சௌந்தராஜன் கேள்வி எழுப்பியுள்ளார் . அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஜீவிதாவுக்கு பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து நிதியுதவி வழங்கி உள்ளார். மாணவியின் மருத்துவப் படிப்பிற்கு நிதியுதவி வழங்கிய அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார், அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு […]

Categories
அரசியல்

“ராஜதந்திரம் அறிந்தவர் கலைஞர் “மம்தா புகழாரம் ..!!

ராஜதந்திரம் நன்கு அறிந்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதி என்று மம்தா பானர்ஜி புகழாரம்  சூட்டியுள்ளார் . ஜூன் 3 ஆம் தேதியான இன்று தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு  அரசியல் […]

Categories
அரசியல் கல்வி

“பாஜக கனவில் கூட நினைத்து பார்க்கக் கூடாது “ஸ்டாலின் எச்சரிக்கை ..!!

மும்மொழி கல்வித் திட்டத்தை பாஜக கனவில் கூட நினைத்து பார்க்கக்கூடாது எச்சரிக்கை  மு.க.ஸ்டாலின் விடுத்துள்ளார் . கல்விக் கொள்கையை முற்றிலுமாக தனியாரிடம் தாரை வார்க்கும் புதிய கொள்கைகளை கஸ்தூரிரங்கன் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. இந்த பரிந்துரையை ஏற்க கூடாது என பல்வேறு தரப்பினர்  கூறி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வரும் இந்த புதிய கல்விக் கொள்கையானது இருமொழிக் கொள்கையை  தவிர்த்து மும்மொழி கொள்கையை வலியுறுத்தி கட்டாயமான முறையில் முன்மொழிகிறது. இந்நிலையில் திராவிட […]

Categories
அரசியல்

“ஏமாந்து போன ஸ்டாலின் “அமைச்சர் காமராஜ் கிண்டல் ..!!

ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்த ஸ்டாலின் ஏமாந்து போனார் என்று அமைச்சர் காமராஜ் விமர்சனம் செய்துள்ளார் . கடந்த மே 23ம் தேதி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் பாரதிய ஜனதாக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரானார். மேலும் சட்டமன்ற இடைத்தேர்தல் மூலமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். ஆனால் பெரும்பகுதியில் திமுக வெற்றி பெற்று இருந்தாலும் ஆட்சி மாற்றத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் “Wait And See” ஸ்டாலின் பேட்டி…!!

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதிலளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்ட மன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில்    திமுக கூட்டணி 13 தொகுதிகல் வெற்றி பெற்றது. அதிமுக 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களின் பதவி ஏற்பு   திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.  சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற  தி.மு.க வேட்பாளர்கள் 13 பேரும் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றனர். இதனால் தமிழக சட்ட மன்றத்தில் 88 ஆக இருந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக MLA_க்கள் பதவி ஏற்பு” சட்டசபையில் 101ஆக உயர்வு…!!

இடைதேர்தலில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க எம்.எல்.ஏக்கள் 13 பேர் ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்றனர்  மக்களவை தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் முக ஸ்டாலின் தலைமையிலான  திமுக கூட்டணி 13 தொகுதிகல் வெற்றி பெற்றது. அதிமுக 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற திமுக  எம்.எல்.ஏக்கள் 28ம் தேதி பதவி ஏற்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில்  சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற  தி.மு.க எம்.எல்.ஏக்கள் 13 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தலில் வென்ற 13 தி.மு.க M.L.A க்கள் 28 -ஆம் தேதி பதவியேற்பு…!!

இடைதேர்தலில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க எம்.எல்.ஏக்கள் 13 பேர் வரும் 28 -ஆம் தேதி பதவியேற்கவுள்ளனர். மக்களவை தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் முக ஸ்டாலின் தலைமையிலான  திமுக 13 தொகுதிகல் வெற்றி பெற்றது. அதிமுக 9 தொகுதிகளில்  வெற்றி பெற்றது. மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 39 தொகுதிகளில் திமுக 38 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆனால் அதிமுக 1 தொகுதி மட்டுமே வென்றது. இதையடுத்து  ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினர்கள் […]

Categories
அரசியல்

“சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற அரசு மோடி அரசு “திருமாவளவன் பரபரப்பு பேச்சு ..!!

மோடி அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற அரசாக திகழ்கிறத்து என்று திருமாவளவன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எனது வெற்றிக்காக உழைத்த தலைவர்களான ஸ்டாலின் வைகோ  ஆகியோருக்கு நன்றி, மதசார்பற்ற கருத்தியலை பாதுகாக்க தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் அதற்கான நடைமுறைகளை விசிக தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும் என்று அவர் பேசினார். மேலும் மோடி ஆட்சியில் தான் சிறுபான்மையினர் தாக்கப்பட ஆரம்பித்தனர். இந்த ஆட்சியில் சிறுபான்மையினர் மிகவும் அச்சத்துடன் […]

Categories
அரசியல்

“சட்டசபையில் அடுத்தகட்ட நகர்வு “மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் !!..

சட்ட மன்றத்தில்  நிகழ்த்த இருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை  குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது . மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு திமுக பாராட்டு  அளிக்கும் வகையில் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தை  இன்று நடத்த இருக்கிறது.மேலும் இக்கூட்டமானது  மக்களவை தேர்தலுக்கு  பிறகு முதல் முறையாக அவரது தலைமையில் நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது  மேலும் திமுக தலைவர் மு க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முக ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்..!!

மக்களவை தேர்தலில் திமுக தலைவர் வெற்றி பெற்றதற்கு ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் 7 கட்டமாக  மக்களவை தேர்தல் நடைபெற்று தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.  மக்களவை தொகுதியில் இந்திய அளவில் பாஜக 349 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் பாஜகவிற்கு வெற்றி உறுதியாகிவிட்டது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. இதனால் திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜகவுடன் கூட்டணி” அரசியலை விட்டு விலக தயாரா..? முக.ஸ்டாலின் கேள்வி…!!

பாஜகவுடன் கூட்டணி பேசுவதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் அதே போல நிரூபிக்க தவறினால் அரசியலை விட்டு விலக தமிழிசை தயாரா என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டு அதற்கான 6 கட்ட வாக்குப்பதிவு  நிறைவடைந்த நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள மக்களவை தேர்தலில் தீடிர் திருப்பங்கள் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு எதிராக 3_ஆவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் தெலுங்கானா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

 “சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை” முக.ஸ்டாலின் பேட்டி…!!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 7 கட்டமாக நடைபெற இருந்த மக்களவை தேர்தல் 6 கட்டம் முடிந்து இறுதி கட்டத்தை எட்டி விட்ட சூழலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ் காங்கிரஸ் கூட்டணி மற்றும் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகின்றார். அந்த வகையில் கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்த  சந்திரசேகராவ் நேற்று சென்னையில் உள்ள திமுக தலைவர் முக.ஸ்டாலின் இல்லத்தில் அவரை சந்தித்தார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”மே 23 ஆம் தேதிக்கு பிறகே எல்லாம் தெரியவரும்”… மு.க.ஸ்டாலின் பேட்டி …!!

”இந்தியாவில் 3-வது  அணி அமையுமா? என்பது மே 23 ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும்” என மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார் . பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முன்தினம்  முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சந்திரசேகர் ராவ் -ஸ்டாலின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது…..திமுக அறிக்கை …!!

சந்திரசேகர் ராவ் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகின்றார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

3_ஆவது அணி தானா..? “சந்திரசேகர் ராவ்-முக.ஸ்டாலினுடன் சந்திப்பு” தேசியளவிலான விவாதம்…!!

திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருவது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“சந்திரசேகரராவ் – முக.ஸ்டாலின் சந்திப்பு” தொடர் ஆலோசனையால் அதிரும் தேசிய அரசியல்…!!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகின்றார். 3_ஆவது அணியை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“நட்பின் அடிப்படையிலேயே சந்திப்பு” 3_ஆவது அணிக்கு வாய்ப்பில்லை…கே.எஸ் அழகிரி பேட்டி….!!

நட்பின் அடிப்படையிலேயே ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்கிறார்  3வது அணி அமைய வாய்ப்பு இல்லை என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

மீண்டும் 3_ஆவது அணி…. ஸ்டாலின் சந்திரசேகர் ராவ் சந்திப்பு…. மாற்றம் காணும் தேசிய அரசியல்…!!

இன்று மாலை திமுக தலைவர் மு.க ஸ்டாலினை, தெலுங்கானா மாநில முதல் முதல்வர்  சந்திரசேகர் ராவ் சந்திக்க இருக்கின்றார். பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மே 19-ம் தேதி இ.பி.எஸ் ஆட்சிக்கு இறுதி மணி அடிக்க தயாராகுங்கள்-ஸ்டாலின் அறைக்கூவல் !!

”எடப்பாடி  ஆட்சிக்கு, மே 19ம் தேதி இறுதி  மணி அடிக்க தயாராகுங்கள் வாக்காளர்களே”   என  வாக்காளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறைக்கூவல்  விடுத்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா ஆவார். இவரை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின், தாளமுத்து நகர், தருவை குளம், புதியமுத்தூர் ஆகிய  பகுதிகளில்  பிரச்சாரம் செய்தார் . அப்போது அவர்  பேசுகையில், ”பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி எடப்பாடி ஆட்சி ” என அவர் விமர்சித்தார். மேலும் தூத்துக்குடி முதல்  சென்னை வரை புதிய ரயில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காலியிடங்களில் மைதானம் அமைக்க வேண்டுமென தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து கோரிக்கை “10 லட்சம் பரிசு வழங்கிய முக ஸ்டாலின் !!!…

ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற கோமதி மாரிமுத்துவுக்கு மு க ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கினார் ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமங்கை கோமதி மாரிமுத்துவிற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டுகளையும் பரிசுகளையும் வழங்கி வருகின்றனர் .இந்நிலையில் ஸ்டாலின் அவர்கள் திமுக சார்பிலும் காங்கிரஸ் சார்பிலும் ரூபாய் 10 லட்சம் கோமதி மாரிமுத்து அவர்களுக்கு […]

Categories
அரசியல் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“புல்வாமா தாக்குதலை வைத்து நடக்கும் வாக்கு சேகரிப்பை நிறுத்த வேண்டும் “மோடிக்கு வைக்கோ எச்சரிக்கை !!!..

இந்திய ராணுவத்தை முன்வைத்து மோடி அவர்கள் வாக்கு சேகரிப்பதை நிறுத்தவேண்டும் என்று வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திருவண்ணாமலை மக்களவைத் தேர்தல் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஸ்டாலினுக்கு பேச தடையில்லை” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

 தேர்தல் நேரத்த்தில் எதிர்க்கட்சி , ஆளுங்கட்சி பரஸ்பரம் விமாசர்சிக்க என்ன இருக்கிறது என்று கூறி ஸ்டாலினுக்கு பேச தடைவிதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான  வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில் அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கட்சிகள் மீது மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”தனிநபர் தாக்குதல் வேண்டாம்” ஸ்டாலினுக்கு நீதிபதி அறிவுரை…!!

கோடநாடு விவகாரத்தில் முதல்வரும் , ஸ்டாலினும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கோடநாட்டில் நடைபெற்ற கொலை , கொள்ளை வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக திமுக தலைவர் முக. ஸ்டாலின் குற்றம் சாட்டி வந்த நிலையில் அவர் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையை தொடர்ந்த நீதிமன்றம் ஸ்டாலின் மீதான விசாரணைக்கு […]

Categories
அரசியல்

எட்டு வழி சாலைக்கெதிரான தீர்ப்பு!!.. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுமா பாமக?. ஸ்டாலின் சரமாரி கேள்வி

சென்னை to சேலம் எட்டுவழிச்சாலை வழக்கில் வெளியான  தீர்ப்பை எதிர்த்து முதலவர் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்யக்கூடாது  என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசா‌மிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை முதல் சேலம் வரை தமிழகஅரசு எட்டுவழிசாலை போடுவதற்கு எதிராக பொதுமக்கள் விவசாயிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதற்கான வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது இதனையடுத்து எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது ,வெளியிடப்பட்ட இந்த உத்தரவை கற்பொழுது ஸ்டாலின் […]

Categories
அரசியல்

“ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம்” பிரச்சாரத்தில் முதல்வர் பேச்சு….!!

பொய் பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று தமிழக   முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக- பாஜக கூட்டணி சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது பேசிய தமிழக முதலமைச்சர் பழனிசாமி, “மக்களவைத் தேர்தலில் மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். திறமையான பாரத பிரதமரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி திறமையான, […]

Categories

Tech |